/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாலையில் பலம்; இரவில் இதம் மாநகரில் வருணபகவான் ஜாலம்!
/
மாலையில் பலம்; இரவில் இதம் மாநகரில் வருணபகவான் ஜாலம்!
மாலையில் பலம்; இரவில் இதம் மாநகரில் வருணபகவான் ஜாலம்!
மாலையில் பலம்; இரவில் இதம் மாநகரில் வருணபகவான் ஜாலம்!
ADDED : செப் 19, 2025 01:30 AM
ஈரோடு, ஈரோடு மாநகரில் நேற்றும் காலை முதலே வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்தது. மதியம், 3:௦௦ மணிக்கு பிறகு கருமேகம் சூழ்ந்து குளிர் காற்று வீசியது.
யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பது போல், ஆஹா மழை வரப்போகிறதே என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
அந்த நம்பிக்கையை பொய்த்து விட செய்யாமல், மழையை பெய்து விட முடிவு செய்த வருண பகவான், 4:15 மணிக்கு துாறலாக ஆரம்பித்து, ஆசிய கோப்பை டுவென்டி-௨௦ கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், ஷாகின் அப்ரிடி பந்தை வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா போல், கொட்டி தீர்த்தார். ஒன்றரை மணி நேரம் வேகம், மிதம் என மாறி, மாறி கொட்டி, ௫:௪௫ மணிக்கு ஓய்வுக்கு சென்றார் வருண பகவான். இரவு என்ன நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை, ௮:௦௦ மணிக்கு துாறலாக இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார்.
ஆஹா மறுபடியும் ஒரு ஆட்டமா? இன்றைக்கு சிவராத்திரியா? என்று மக்கள் மத்தியில் அச்சமும் எழுந்தது. இதுவும் அவருக்கு கேட்டுவிட்டது போல... வேகத்தை கூட்டாமல் ராகுல் டிராவிட் போல் ஒரு மணி நேரத்துக்கு துாறலாக மட்டுமே ஆடி ஒன்பது மணிக்கு இரண்டாவது இன்னிங்சை முடித்து கொண்டார்.
* கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மதியம், 2:45 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. இரவு வரை சாரல் மழை நீடித்தது. கோபி மட்டுமின்றி புதுப்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வெள்ளாளபாளையம், தாசம்பாளையம், பொலவக்காளிபாளையம், சூரியம்பாளையம், பாலப்பாளையம், ஐய்யம்பாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதியில் இதே நிலை காணப்பட்டது. இதனால் இருட்ட தொடங்கிய பிறகு, முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.
* அந்தியூரை அடுத்த பர்கூர்மலையில் பர்கூர், தாமரைக்கரை, தட்டகரை, ஊசிமலை உள்ளிட்ட இடங்களில், நேற்று மதியம், 2:00 மணி முதல் 3:00 மணி வரை கனத்த மழை பெய்தது.
இதேபோல் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான, தவிட்டுப்பாளையம், மைக்கேல்பாளையம், சின்னத்தம்பிபாளையம், பிரம்மதேசம், வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி பகுதிகளில் மாலை, 5:00 மணிக்கு தொடங்கிய மிதமான மழை, 10:௦௦ மணி வரை துாறலாக பெய்தபடியே இருந்தது.