/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் ஜி.ஹெச்.,ல் அமைச்சர் ஆய்வு
/
காங்கேயம் ஜி.ஹெச்.,ல் அமைச்சர் ஆய்வு
ADDED : ஜூலை 27, 2025 01:23 AM
காங்கேயம் :காங்கேயம் அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி, 12 கோடி ரூபாய் மதிப்பில், 58 கூடுதல் படுக்கையுடன் கூடிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. மூன்று தளங்களாக அமையும் கட்டடத்தில், தரைத்தளம் 8,482 சதுர அடி பரப்பளவில் வரவேற்பறை, கண் சிகிச்சை, எலும்பு சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை வெளிப்புற நோயாளிகள் பிரிவு, மருந்தக அறை உள்ளிட்டவை அமைகிறது. இதேபோல் முதல் மற்றும் இரண்டாவது தளமும், 8,482 சதுர அடி பரப்பளவில் அமைகிறது.
இவற்றில் பெண்களுக்கான அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கவனிப்பு பிரிவு, மருத்துவர் மற்றும் செவிலியர் அறை, அறுவை சிகிச்சை அரங்கு (மகப்பேறு), அறுவை அரங்கு (பொது மருத்துவம்) மற்றும் அறுவை அரங்கு (கண் சிகிச்சை), மகப்பேறு பிரிவு உள்ளிட்ட பிரிவு அமைகிறது. மூன்றாம் தளம், 5,737ச சதுர அடி பரப்பளவில் அமைகிறது. கூடுதல் கட்டடத்தில் மின் துாக்கி மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிக்கான பணி தற்போது நடந்து வருகிறது. இதை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் (பொதுப்பணி) முத்து சரவணன், காங்கேயம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சந்திரசேகர், தி.மு.க., நகர செயலாளர் சேமலையப்பன், ஒன்றிய செயலாளர் சிவானந்தன், காங்கேயம் நகராட்சி தலைவர் சூர்யபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

