/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'லோக்சபா தேர்தல் மூலம் தேசத்துக்கு வழிகாட்டும்' பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மகேஷ் பேச்சு
/
'லோக்சபா தேர்தல் மூலம் தேசத்துக்கு வழிகாட்டும்' பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மகேஷ் பேச்சு
'லோக்சபா தேர்தல் மூலம் தேசத்துக்கு வழிகாட்டும்' பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மகேஷ் பேச்சு
'லோக்சபா தேர்தல் மூலம் தேசத்துக்கு வழிகாட்டும்' பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மகேஷ் பேச்சு
ADDED : பிப் 17, 2024 07:25 AM
ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, ஈரோடு அடுத்த ஆணைக்கல்பாளையத்தில் தி.மு.க., சார்பில், 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற பொதுக்கூட்டம் எம்.பி., அந்தியூர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
தி.மு.க., மாநில கட்சியாக, மாநிலத்தில் ஆட்சியை நடத்தினாலும் தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாகும். மோடி, அமித்ஷா, நட்டா போன்றோர் எங்கு பேசினாலும், தி.மு.க., தலைவர்களை பற்றி பேசாமல் இருக்க முடியாது என்ற அளவு, நாம் கொள்கையால் பதிலடி கொடுக்கிறோம். நம்மிடம் நேருக்கு நேர் மோத முடியாததால்தான் சி.பி.ஐ., - ஐ.டி., - ஈ.டி., என்ற ஆயுதங்களை கையாள்கின்றனர்.
நடக்க உள்ள லோக்சபா தேர்தல், ஜனநாயகத்தின் முன் பல கேள்வியை எழுப்பும்படி உள்ளது. இனி ஓட்டுப்போடும் உரிமை இருக்குமா, ஜனநாயகம், அரசியல் சாசனங்கள், அரசியலமைப்பு சட்டங்களை காக்க முடியுமா என்ற கேள்விகளை முன்வைக்கிறது.
டில்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். வழக்கம்போல, பிரதமர் மோடி அபுதாபியில் கோவிலை திறந்து வைக்கிறார். கோவிலுக்கு செல்லக்கூடாது எனக்கூறவில்லை. விவசாயிகளை பயங்கரவாதிகள் போல நடத்துவதை நிறுத்திவிட்டு, அவர்களிடம் பேசுவதற்கான வழியை பார்க்கலாம். தமிழகத்தில் மக்களின் நலனுக்கான திட்டங்களை நாம் முன்வைக்கிறோம். அவற்றை நம்மால் பட்டியலிட்டு பேச முடியும். அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை. பல மாநிலங்களுக்கு வழிகாட்டியாக உள்ள தமிழகம், இந்த தேர்தல் மூலம் தேசத்துக்கு வழிகாட்டும். இவ்வாறு பேசினார்.
முன்னதாக அமைச்சர்கள் சு.முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் பேசினர்.மேயர் நாகரத்தினம், மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரகாஷ், மாவட்ட அமைப்பாளர் திருவாசகம், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், முன்னாள் எம்.பி., கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.