/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எம்.பி., தேர்தல் முடிவே வரும் தேர்தலில் எதிரொலிக்கும் இ.பி.எஸ்.,சுக்கு அமைச்சர் முத்துசாமி பதில்
/
எம்.பி., தேர்தல் முடிவே வரும் தேர்தலில் எதிரொலிக்கும் இ.பி.எஸ்.,சுக்கு அமைச்சர் முத்துசாமி பதில்
எம்.பி., தேர்தல் முடிவே வரும் தேர்தலில் எதிரொலிக்கும் இ.பி.எஸ்.,சுக்கு அமைச்சர் முத்துசாமி பதில்
எம்.பி., தேர்தல் முடிவே வரும் தேர்தலில் எதிரொலிக்கும் இ.பி.எஸ்.,சுக்கு அமைச்சர் முத்துசாமி பதில்
ADDED : ஜூலை 25, 2025 12:47 AM
ஈரோடு, ''கடந்த, 2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்தான், 2026 சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும்,'' என, வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோட்டில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர், நிருபர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி : உங்களுடன் ஸ்டாலின் திட்டம், மதுக்கடை ஊழல் குறித்து அ.தி.மு.க., பொது செயலாளர் இ.பி.எஸ்., வைக்கும் குற்றச்சாட்டு குறித்து?
அமைச்சர் முத்துசாமி: கடந்த நான்கரை ஆண்டுகளில், பல்வேறு தலைப்புகளில் மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று வருகிறோம். தீர்வு காண்கிறோம். அந்த வகையில் தான், உங்களுடன் ஸ்டாலின் திட்டமும் கொண்டு வரப்பட்டு மனு பெறப்படுகிறது. அரசு பொறுப்பேற்றதில் இருந்து, வெவ்வேறு பெயர்களில் திட்டம் கொண்டு வந்து, மனுக்கள் பெற்று தீர்வு தருகிறோம். தேர்தல் நேரத்தில் செய்கிறோம் என குற்றம்சாட்ட கூடாது. மனுக்களை கண்காணிப்பதற்காக மட்டுமே உயர் அதிகாரிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
கேள்வி : மது கடைகளை குறைப்பது குறித்து அரசு தான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளதே?
அமைச்சர்: அரசு ஏற்கனவே அறிவித்தபடி, படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து வருகிறோம். இதுவரை, 500 கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுக்கடைகள் மீதான குற்றச்சாட்டு வைப்பவர்களிடம் அதற்கான ஆதாரத்தை கேட்கிறோம். ஈ.டி., ரெய்டில் கூட என்ன தவறுகளை கண்டுபிடித்தார்கள். காலவரையறை வைத்து கடைகளை மூட முடியாது. அவ்வாறு மூடினால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும்
தெரியும்.
கேள்வி: விடுதலை சிறுத்தைகள் கட்சியை, தி.மு.க., பாதி முழுங்கி விட்டது என்று இ.பி.எஸ்., பேசியுள்ளாரே?
அமைச்சர்: நாங்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை அவரே கூறுகிறார். எங்களது கூட்டணி நன்றாக உள்ளது. யாரும் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சொல்லவில்லை என்பதால், அவர்களின் வருத்தத்தை இப்படி வெளிப்படுத்துகின்றனர். கூட்டணி கட்சிகள், தி.மு.க.,வுக்கு இணையாகத்தான் பார்க்கப்
படுகிறது.
கேள்வி: தி.மு.க., ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் பணியாற்ற முடியாது? என, பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளாரே?
அமைச்சர்: ஒவ்வாரு பிரச்னையையும் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் நோக்கம். தவறான பிரச்னைகளுக்கு முதல்வர் உடன்பட மாட்டார்.
கேள்வி : நான், 36 தொகுதிகளை கவர்ந்து விட்டேன். போகும் இடமெல்லாம் மக்களின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. தி.மு.க., அரசுக்கு எதிரான மக்களின் எழுச்சி காணப்படுகிறது. 210 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் என இ.பி.எஸ்., பேசியுள்ளாரே?
அமைச்சர்: கடந்த எம்.பி., தேர்தலின் போது கூட இப்படித்தான் இ.பி.எஸ்., கூறினார். ஆனால், 40 தொகுதிகளையும், தி.மு.க.,தான் வென்றது. வரும், 2026 சட்டசபை தேர்தலிலும் அதுதான் பிரதிபலிக்கும்.
இவ்வாறு பேட்டியில் கூறினார்.