அத்திக்கடவு - அவிநாசி திட்டம் சிக்கல் களைய அமைச்சர் உத்தரவு
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் சிக்கல் களைய அமைச்சர் உத்தரவு
ADDED : ஜூன் 16, 2026 03:56 AM
அ நிறம் | அளவு
அவிநாசி; அத்திக்கடவு -- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளுக்குத் தடையின்றி நீர் நிரப்பு-வது குறித்த ஆலோசனைக் கூட்டம், அவிநாசி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் அமைச்சர் கமலி தலை மையில் நடந்தது.
முதற்கட்ட திட்டத்தில் இதுவரை நீர் நிரம்பாத குளம், குட்டைகளைக் கண்டறிந்து உடனடியாக நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கவும், இதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கவும் அதிகாரி-களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், நீர் வரும் குழாய்கள் மற்றும் வால்வுகளின் பழுது-களைத் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்-தினார். இதில் நீர்வள பாதுகாப்புத் துறை நிர்வாகப் பொறியாளர்கள் அப்புசாமி, பிரியா மற்றும் எல் அண்ட் டி நிர்வாக அதிகாரி பாஸில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
