/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீரன் சின்னமலை நினைவு நாள் சொந்த ஊரில் அமைச்சர் அஞ்சலி
/
தீரன் சின்னமலை நினைவு நாள் சொந்த ஊரில் அமைச்சர் அஞ்சலி
தீரன் சின்னமலை நினைவு நாள் சொந்த ஊரில் அமைச்சர் அஞ்சலி
தீரன் சின்னமலை நினைவு நாள் சொந்த ஊரில் அமைச்சர் அஞ்சலி
ADDED : ஆக 04, 2025 08:55 AM
காங்கேயம்: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த ஊரான, காங்கேயம் அருகே மேலப்பாளையத்தில், அவரது உருவப்படத்துக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அரசு சார்பில் மனிதவள மேலாண்மைதுறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் கலெக்டர் மனீஷ் உள்ளிட்டோர், அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் இல.பத்மநாபன், காங்., அகில இந்திய செயலாளர் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொ.ம.தே.க., சார்பில் சூரியமூர்த்தி, த.மா.கா., சார்பில் விடியல் சேகர், நமது கொங்கு முன்னேற்ற கழகம் இளைஞர் அணி நிர்வாகி ரமேஷ் மற்றும் பல்வேறு கொங்கு அமைப்பினர், மக்கள் மரியாதை செய்தனர்.