/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அணையில் நீர் திறக்க முதல்வருக்கு அமைச்சர் கோரிக்கை
/
பவானிசாகர் அணையில் நீர் திறக்க முதல்வருக்கு அமைச்சர் கோரிக்கை
பவானிசாகர் அணையில் நீர் திறக்க முதல்வருக்கு அமைச்சர் கோரிக்கை
பவானிசாகர் அணையில் நீர் திறக்க முதல்வருக்கு அமைச்சர் கோரிக்கை
ADDED : ஜூலை 30, 2025 01:25 AM
காங்கேயம், பவானிசாகர் அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறக்க, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து ஆண்டு தோறும் ஆக.,15ம் தேதி முதல் போக பாசனத்துக்கு, கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கீழ்பவானி திட்ட பாசன பகுதிகளில், போதிய மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது.
தற்போது பவானிசாகர் அணை நிரம்பி, உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும், அமைச்சர் சாமிநாதன் கடிதம் அனுப்பியுள்ளார்.