/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மேட்டூர் அணை உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம்; அமைச்சர் ஆய்வு
/
மேட்டூர் அணை உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம்; அமைச்சர் ஆய்வு
மேட்டூர் அணை உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம்; அமைச்சர் ஆய்வு
மேட்டூர் அணை உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம்; அமைச்சர் ஆய்வு
ADDED : அக் 26, 2025 12:53 AM
அந்தியூர், மேட்டூர் அணை உபரிநீரை குழாய் மூலம் கொண்டு சென்று, கொளத்தூர் மற்றும் பவானி, அந்தியூர் தாலுகாவில் ஏரி, குளங்களை நிரப்பும் திட்டம் குறித்து, கள ஆய்வு நேற்று மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் செயல்வடிவம் சம்பந்தமாக சேலம் மாவட்டம் கொளத்தூர் பேரூராட்சி, சின்ன மேட்டூர், செட்டிப்பட்டி பரிசல்துறை பகுதிகளில், வீட்டுவசதி மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: இத்திட்டத்துக்கு தேவையான நீரின் அளவு விநாடிக்கு, 250 கன அடி. இந்த உபரிநீர், 60 கி.மீ., தொலைவுக்கு பிரதான குழாய்கள் வழியாகவும், 250 கி.மீ., நீளம் கிளை குழாய் வழியாகவும், அந்தியூர், பவானி மற்றும் மேட்டூர் தாலுகா குளம், குட்டைகளுக்கு வழங்கப்படும். திட்டத்தின் மூலம், 3,931 ஏக்கர் நிலம் நேரடியாகவும், 14,051 ஏக்கர் நிலம் மறைமுகமாக பயன்பெறும். திட்டத்துக்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்க, நில அளவை மற்றும் மட்டப்படுதுதல் பணிகளுக்கான நிதி பெறுவதற்காக மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
அமைச்சருடன் கலெக்டர்கள் கந்தசாமி (ஈரோடு), பிருந்தா தேவி (சேலம்), ராஜ்யசபா எம்.பி., செல்வராஜ், ஈரோடு எம்.பி., பிரகாஷ், எம்.எல்.ஏக்கள்., வெங்கடாசலம், சந்திரகுமார் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

