/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
384 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்
/
384 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்
384 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்
384 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்
ADDED : நவ 14, 2025 01:13 AM
காங்கேயம்,காங்கேயம் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில், 1.34 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்து, காங்கேயம் வட்டம் வீரணம்பாளையம், படியூர், சிவன்மலை, ஆரத்தொழுவு, வெள்ளகோவில், முத்துார் பகுதிகளை சேர்ந்த, 384 பயனாளிகளுக்கு வருவாய்த்துறை சார்பில், வீட்டுமனைப் பட்டாக்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று வழங்கினார்.
நிகழ்ச்சியில், வெளிநாடுவாழ் தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், காங்கேயம் தாசில்தார் தங்கவேல், காங்கேயம் ஒன்றிய, நகர செயலாளர்கள், மக்கள் கலந்து
கொண்டனர்.