/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெள்ளகோவிலில் மருத்துவ முகாம் துவக்கி வைத்த அமைச்சர் சாமிநாதன்
/
வெள்ளகோவிலில் மருத்துவ முகாம் துவக்கி வைத்த அமைச்சர் சாமிநாதன்
வெள்ளகோவிலில் மருத்துவ முகாம் துவக்கி வைத்த அமைச்சர் சாமிநாதன்
வெள்ளகோவிலில் மருத்துவ முகாம் துவக்கி வைத்த அமைச்சர் சாமிநாதன்
ADDED : அக் 27, 2024 01:28 AM
காங்கேயம், அக். 27-
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில், வெள்ளகோவில் நகராட்சி எல்.கே.சி.நகர் அரசு நடுநிலை பள்ளியில், இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
வெள்ளகோவில் நகர்மன்ற தலைவர் கனியரசி, நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன், வெள்ளகோவில் நகர தி.முக., செயலாளர் முருகானந்தம், அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில், ஐந்து பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம், ஐந்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து நலப்பெட்டகம், 4 மாணவியர்களுக்கு கலைஞரின் கண்ணொளி காப்போம் திட்டத்தில் மூக்கு கண்ணாடிகளையும் அமைச்சர் வழங்கினார்.