/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு அமைச்சர் கோரிக்கை
/
இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு அமைச்சர் கோரிக்கை
இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு அமைச்சர் கோரிக்கை
இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு அமைச்சர் கோரிக்கை
ADDED : டிச 13, 2025 05:17 AM
ஈரோடு: வேளாண் துறை சார்பில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு மற்றும் சிறுதானிய உணவுத்திருவிழா கண்காட்சி ஈரோட்டில் நடந்தது.
கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் ஈரோடு கிழக்கு சந்திரகுமார், அந்தியூர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவகுமார் வரவேற்றார். சிறுதானிய பயிர்களின் சத்துக்கள், அவற்றால் தயாரிக்கப்படும் உணவு, அதன் பயன்களை உரிய உணவுடன் காட்சிப்படுத்தி இருந்தனர். அவற்றை பார்வையிட்டு, நலத்திட்ட உதவி வழங்கி வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:
இந்த அரசு, வேளாண்மைக்கு என தனி பட்ஜெட்டை அறிவித்து, அதனை விரிவாக செயல்படுத்துகிறது. விவசாயிகளுக்கான பிரச்னைகளை தீர்க்க முனைப்பு காட்டுகிறது.
அதுபோல இயற்கை விவசாயம், சிறுதானிய உணவுகளை மக்கள் நேசிக்கின்றனர். இன்றைய சூழலுக்கு ஏற்ப நல்ல உணவை உட்கொள்ள விரும்புவோர், சிறுதானியங்களையும், இயற்கையில் விளைவிக்கப்பட்ட உணவை உட்கொள்ள விரும்புகின்றனர். ஒவ்வொரு விவசாயியும், தன்னிடம் உள்ள நிலத்தில் ஒரு பகுதியில் இயற்கை விவசாயம் செய்யலாம்.
சில ஆண்டுக்கு பின் முழுமையாக இயற்கை விவசாயத்துக்கு மாறும்போது, சிறந்த லாபம் பெறலாம்.
இவ்வாறு பேசினார்.
இதை தொடர்ந்து இயற்கை விவசாயம், சிறுதானிய உற்பத்தி, சிறுதானிய உணவு தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி, விளக்கம் அளிக்கப்பட்டது.

