/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கலெக்டர் ஆபீஸ் பெயரில் போலி முகநுால் கணக்கு
/
கலெக்டர் ஆபீஸ் பெயரில் போலி முகநுால் கணக்கு
ADDED : டிச 12, 2025 08:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகம் சார்பில், 'District Collector Erode' பெயரில் பேஸ்புக் கணக்கு செயல்படுகிறது. இதே பெயரில் சில போலி நபர்கள் பேஸ்புக் கணக்கை துவக்கி, தவறான தகவல் பதி-விடுகின்றனர்.
சிலரிடம் பணம், பிற தேவைக்கு உதவி என கேட்கின்றனர். போலி நபர்களின் முகநுால் பக்கத்தை பார்த்து யாரும் ஏமாற வேண்டாம். இச்செயலில் ஈடுபடும்
நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

