/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொபட் மீது கார் மோதி கட்டட தொழிலாளி பலி
/
மொபட் மீது கார் மோதி கட்டட தொழிலாளி பலி
ADDED : டிச 11, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோப: கவுந்தப்பாடி அருகே பாண்டியம்பாளையத்தை சேர்ந்தவர் மணியன், 65, கட்டட தொழிலாளி; இவர் கவுந்தப்பாடி அருகே செட்டிகரடு என்ற இடத்தில், ஈரோடு சாலையை நேற்று முன்-தினம் மாலை, 6:00 மணிக்கு டி.வி.எஸ்., எக்சல் மொபட்டில் கடந்தார்.
அப்போது கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகரை சேர்ந்த ராஜேஷ், 45, என்பவர் ஓட்டி வந்த இனோவா கிறிஸ்டா கார் மோதிய விபத்தில் மணியன் பலத்த காயமடைந்தார். கவுந்தப்-பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணியன் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ரவி, கொடுத்த புகார்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

