/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி தாசில்தாரிடம் பட்டா வேண்டி மனு
/
பவானி தாசில்தாரிடம் பட்டா வேண்டி மனு
ADDED : டிச 11, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி அருகே தொட்டிபாளையம் பஞ்., ஜீவா நகர், ஊராட்சிக்-கோட்டை பகுதியில், மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டி, நேற்று கம்-யூனிஸ்ட் கட்சி சார்பில், தாசில்தார் சரவணனிடம் மனு அளித்-தனர்.
அதில் கூறியிருப்பதாவது: ஜீவா நகர், ஊராட்சிக்கோட்டை பகு-தியில் உள்ள மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். காலாவதி-யான நிபந்தனை பட்டாவுக்கு பதிலாக, நிரந்தர பட்டா வழங்க வேண்டும். சின்னகரடு பகுதி மக்களுக்கு, மின் இணைப்பு, பட்டா உடனே வழங்க வேண்டும். ஊராட்சிகோட்டை ராஜீவ் நகரில் சாலை வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

