/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆலை கழிவுகளை வெளியே கொட்டினால்கடும் நடவடிக்கை; அமைச்சர் எச்சரிக்கை
/
ஆலை கழிவுகளை வெளியே கொட்டினால்கடும் நடவடிக்கை; அமைச்சர் எச்சரிக்கை
ஆலை கழிவுகளை வெளியே கொட்டினால்கடும் நடவடிக்கை; அமைச்சர் எச்சரிக்கை
ஆலை கழிவுகளை வெளியே கொட்டினால்கடும் நடவடிக்கை; அமைச்சர் எச்சரிக்கை
ADDED : மார் 23, 2025 01:09 AM
ஆலை கழிவுகளை வெளியே கொட்டினால்கடும் நடவடிக்கை; அமைச்சர் எச்சரிக்கை
ஈரோடு:ஈரோட்டில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. ஈரோடு எம்.பி., பிரகாஷ், எம்.எல்.ஏ.,க்கள் ஈரோடு கிழக்கு சந்திரகுமார், அந்தியூர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர்.
ஆய்வு கூட்டத்துக்கு பின், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது: பட்ஜெட்டில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தந்த மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய அறிவிப்புக்கான பணிகளை ஆய்வு செய்து தெரிவிக்க முதல்வர் கேட்டுள்ளார். அதற்கான ஆய்வு நடந்தது. ஈரோடு குளத்துப் பாளையத்தில் கெமிக்கல் கழிவை கொட்டியதால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட இடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேரங்களில் இதுபோன்று கழிவை கொட்டியதற்காக, பல ஆலைகள் 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. நாய் கடித்து இறந்த கால்நடைகளுக்கு, அரசு அறிவித்த நிவாரணம் விரைவில் கிடைக்கும். மாநகராட்சியில் வரி குறைப்பது ஆய்வில் உள்ளது. திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், ராஜகோபுரம் கட்டும் பணி ஆய்வு செய்யப்பட்டது. சன்னதிக்கு நேராக செல்ல, 108 படிக்கட்டு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முருகர் சிலை வைக்க
பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இவ்வாறு கூறினார். மேயர் நாகரத்தினம், துணை மேயர்
செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.