தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மூத்த தம்பதிகளுக்கு அமைச்சர் சீர்வரிசை

மூத்த தம்பதிகளுக்கு அமைச்சர் சீர்வரிசை

மூத்த தம்பதிகளுக்கு அமைச்சர் சீர்வரிசை


ADDED : பிப் 11, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 06:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு: இந்து சமய அறநிலையத் துறை சார்பில், 70 வயதுக்கு மேற்பட்ட தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

இதன்படி ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த நிகழ்வில், 35 மூத்த தம்பதிகளுக்கு வேட்டி, சட்டை, புடவை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தொகுப்பை, வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். கருங்கல்பாளையம் சோழீஸ்வரர் கோவிலில், 40 மூத்த தம்பதிகளுக்கு சீர்வரிசை தொகுப்பு வழங்கினார்.

* கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், 11 மூத்த தம்பதிக்கு நேற்று சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்வில் கோவில் செயல் அலுவலர் அனிதா, ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க.,

செயலாளர் நல்லசிவம், கோபி நகர

செயலாளர் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

* பவானி கூடுதுறை

சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில், 12 மூத்த தம்பதியினருக்கு திருக்கல்யாண நிகழ்வு நடந்தது. அனைவருக்கும், 2,500 ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்வில் கூடுதுறை கோவில் உதவி ஆணையாளர் அருள்குமார், நகர்மன்ற தலைவர் சிந்துாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், 75 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்து, சீர்வரிசை வழங்கப்பட்டது. முன்னதாக தம்பதியருக்கு, சுயம்வர கலா பார்வதி ஹோமம் நடந்தது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் பழனிவேலு, தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வம், கோவில் செயல் அலுவலர்

சரவணன் ஆகியோர், அரசு வழங்கிய சீர்வரிசை பொருட்களை, மூத்த தம்பதிகளுக்கு வழங்கினர்.

* பெருந்துறை வட்டம் தங்கமேடு தம்பிக்கலை ஐயன் சுவாமி கோவிலில், 50க்கும் மேற்பட்ட மூத்த தம்பதியருக்கு, பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் கோகிலா தங்கமுத்து, சீர்வரிசை வழங்கினர். தொடர்ந்து அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் விஸ்வநாதன், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us