/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பல்வேறு திட்டப்பணிகளுக்கு அமைச்சர்கள் அடிக்கல்
/
பல்வேறு திட்டப்பணிகளுக்கு அமைச்சர்கள் அடிக்கல்
ADDED : அக் 05, 2025 12:50 AM
தாராபுரம், தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதுார் ஊராட்சியில், 45.98 லட்சம் ரூபாய் மதிப்பில், உடுமலை சாலை முதல் அலங்கியம் இணைப்பு சாலை வரை சாலை அமைக்கும் பணி, 34.35 லட்சம் ரூபாய் மதிப்பில் உடுமலை சாலை முதல் மாருதி நகர் வரை சாலை அமைத்தல், அதே பகுதியில், 18 லட்சம் ரூபாய் செலவில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், கொண்டரசம்பாளையத்தில், 17.20 லட்சம் மதிப்பில், 190 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர்
குழாய் விஸ்தரிப்பு செய்தல், 8.20 லட்சம் மதிப்பில் மயானத்துக்கு சுற்றுச்சுவர் அமைத்தல், ஊராட்சி மன்ற அலுவலகம் முதல் உடுமலை சாலை வரை, 13 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, நேற்று மாலை பூமி பூஜை நடந்தது. இதில் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, ஈரோடு எம்.பி., பிரகாஷ் மற்றும் தி.மு.க., ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.* முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில், தாராபுரம்-திருப்பூர் சாலையில், இடையன்கிணறு முதல் குண்டடம் வரை, 1.74 கி.மீ., துாரத்துக்கான சாலையை, 98.90 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தும் பணியை, அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி நேற்று தொடங்கி வைத்தனர்.