/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'1.20 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறணும்' ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பேச்சு
/
'1.20 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறணும்' ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பேச்சு
'1.20 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறணும்' ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பேச்சு
'1.20 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறணும்' ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பேச்சு
ADDED : ஜன 13, 2025 02:27 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து, 'இண்டி' கூட்-டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்-தது. எம்.பி., அந்தியூர் செல்வராஜ் தலைமை வகித்து, தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமாரை அறிமுகம் செய்து வைத்தார். இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:
ஈரோடு கிழக்கில் தி.மு.க., போட்டியிட காங்., இடம் கொடுத்-துள்ளது. தி.மு.க.,வில், சந்திரகுமார், மாவட்ட துணை செயலா-ளர்கள் செந்தில்குமார், செல்லபொன்னி, குறிஞ்சி சிவகுமார் வாய்ப்பு கேட்டனர். நால்வரும் தகுதியானவர்கள் என்பதால், யாரை முடிவு செய்வது என்பதில் முதல்வரே ஒரு நாள் தாமதமா-கத்தான் அறிவித்தார். சந்திரகுமாரை வேட்பாளராக அறிவித்து, மற்றவர்களை பணி செய்ய கேட்டு கொண்டார்.இத்தொகுதியில் காங்., சார்பில் திருமகன் ஈவெரா, இளங்கோவன் போட்டியிட்ட-போது கூட்டணியில் அனைவரும் இணைந்து பணி செய்தனர். கடந்த தேர்தலில், 66,000 ஓட்டு வித்தியாசத்தில் வென்றோம். அத்தேர்தலுக்கு பின், முதல்வர் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளதால், 1.20 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற பணி செய்ய வேண்டும். இந்திய அளவில் தமிழகத்-தில்தான், இக்கூட்டணி சார்பில் கடந்த லோக்சபா தேர்தலில், 40க்கு 40 பேரும் வென்றனர். இதுபோல எந்த மாநிலத்திலும் இல்லை. முதல்வர் ஸ்டாலின் ஒரு முடிவை எடுக்கும்போது அனைத்து கட்-சிக்குமானதாகவே எடுக்கிறார். அதுபோலத்தான் தற்போதைய வேட்பாளர் அறிவிப்பும். தேர்தல் பிரசாரத்தில் விதிமீறாமல் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேளுங்கள். இவ்-வாறு அமைச்சர் பேசினார்.