தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மிசா கொடுமை; மாஜி அமைச்சர் விளக்கம்

மிசா கொடுமை; மாஜி அமைச்சர் விளக்கம்

மிசா கொடுமை; மாஜி அமைச்சர் விளக்கம்


ADDED : செப் 13, 2026 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 06:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:சட்டசபையில் முதல்வர் விஜயின் பேச்சை கண்டித்து, ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட தி.மு.க., சார்பில், வடக்கு மாவட்ட செயலர் நல்லசிவம் தலைமையில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:

சட்டசபையில் முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் மிசா கைது குறித்தும், வேறு சில கருத்துக்களை கூறியதும் தி.மு.க., தொண்டர்களை புண்படுத்தியது. காவல் துறை மானிய கோரிக்கையில் தவறான, தொடர்பில்லாத தகவல்களை முதல்வர் பேசினார். இதற்கு திருமாவளவன், கம்யூ., தலைவர்கள் கூட முதல்வரை கண்டித்தனர். அவரது பேச்சின் உண்மையை விளக்கவே இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. மிசாவில் கைதானவர்கள் அனுபவித்த கொடுமைகளை மக்கள் அறிவார்கள். அவர்களை கொச்சைப்படுத்துவது அழகல்ல. இவ்வாறு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு எம்.பி., பிரகாஷ், முன்னாள் எம்.பி.,க்கள் அந்தியூர் செல்வராஜ், கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரகுமார், நிர்வாகிகள் சுப்பிரமணியம், திருவாசகம் உட்பட பலர்

பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us