தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பெண்ணிடம் தவறான சைகை 'மப்பு' ஆசாமிகள் அட்டூழியம்

பெண்ணிடம் தவறான சைகை 'மப்பு' ஆசாமிகள் அட்டூழியம்

பெண்ணிடம் தவறான சைகை 'மப்பு' ஆசாமிகள் அட்டூழியம்


ADDED : ஜூன் 15, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 04:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு கடந்த, 12ம் தேதி இரவு தர்மபுரியை சேர்ந்த மணி, 30, அவரது மனைவி ரேவதி, 28, வெளியூர் செல்ல வந்தனர்.

சேலம், தாதகாபட்டியை சேர்ந்த ராஜா, 29, என்பவர் மணிக்கு அறிமுகமானார். இருவரும் ரயில்வே ஸ்டேஷன் போர்டிகோவில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது ரேவதி, தன்னை குடிபோதை ஆசாமி இருவர் சைகை மூலம் இச்சைக்கு அழைப்பதாக கணவர் மணியிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மணி, ராஜா இருவரும், போதை ஆசாமிகளிடம் தட்டி கேட்டதில், இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மதுபோதை ஆசாமி, தான் வைத்திருந்த பிளேடால் ராஜா, மணி இருவரது கைகளிலும் கிழித்துள்ளார். புகாரின்படி ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவான மதுபோதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us