நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாளவாடி : தாளவாடி அருகே தொட்டகாஜனுாரை சேர்ந்த பிரேமா மகள் நீதா, 20; கல்லுாரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தார்.
நேற்று முன் தினம் மாலை வீட்டில் இருந்தவர் மாயமானார். இதுகுறித்து பிரேமா புகாரின்படி, தாளவாடி போலீசார் தேடி வருகின்றனர்.* கடம்பூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன், 24; கூலி தொழிலாளியான இவர், அய்யன்சாலை பகுதி தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார். கடந்த, 29ம் தேதி சொந்த வேலையால் சத்தியமங்கலம் சென்றவர் திரும்பவில்லை. இதுகுறித்து சத்தி போலீசில், ஐயப்பன் மனைவி அமுதா அளித்த புகாரின்படி, போலீசார் தேடி வருகின்றனர்.