/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேரோட்டம் தனித்தனியே பங்கேற்ற எம்.எல்.ஏ., - அமைச்சர்
/
கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேரோட்டம் தனித்தனியே பங்கேற்ற எம்.எல்.ஏ., - அமைச்சர்
கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேரோட்டம் தனித்தனியே பங்கேற்ற எம்.எல்.ஏ., - அமைச்சர்
கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேரோட்டம் தனித்தனியே பங்கேற்ற எம்.எல்.ஏ., - அமைச்சர்
ADDED : ஜன 13, 2024 03:49 AM
கோபி,: பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் தேரோட்டத்தில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து, தேரை இழுத்தனர்.
கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழாவில், நேற்று முன்தினம், தீ மிதி விழா நடந்தது. இந்நிலையில் தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக விநாயகர் மற்றும் அம்மன் தேர், கொண்டத்துக்காளியம்மன் கோவிலின் ராஜகோபுரம் அருகே தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் தலைமையில், அவரது ஆதரவாளர்கள் மற்றும் பக்தர்கள், முதலில் விநாயகர் தேரை மாலை, 4:00 மணிக்கு வடம்பிடித்து இழுத்தனர்.சிறிது நேரத்தில் ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். அதன்பின், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் மற்றும் தி.மு.க.,வினர் அடங்கிய குழுவினர், மாலை, 5:10 மணிக்கு வந்தனர். அமைச்சர் முத்துசாமி, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள், 5:15 மணிக்கு அம்மன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இரு தேர்களும் பாரியூர் பஸ் நிறுத்தம் வழியாக ஆதிநாராயண பெருமாள் கோவிலை கடந்து, ஈஸ்வரன் கோவிலை அடைந்தது. தேர்த்திருவிழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். உப்பு துாவி வழிபாடுகொண்டத்துக்காளியம்மன் கோவிலில், குண்டம் விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்நிலையில் அம்மன் சன்னதி எதிரேயுள்ள குண்டத்தில், உப்பு கொட்டி ஏராளமான பக்தர்கள் நேற்று வழிபட்டனர். ஏராளமான பெண்கள், அகல் விளக்கு மற்றும் எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றி வழிபட்டனர்.