ADDED : ஜூலை 24, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழக
முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் நேற்று ரிலீஸானது.
சிவகிரியில் ஒரு திரையரங்கில் வெளியான படத்துக்கு, த.வெ.க.,
நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் குவிந்தனர்.
மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சண்முகனும், முதல் காட்சியை பார்க்க தனது
ஆதரவாளர்களுடன் வந்தார்.
அப்போது விஜய் பாடல்களை
ஒலிபெருக்கியில் ஒலிக்கவிட்டு ரசிகர்கள் ஆட்டம் போட்டுக்
கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து எம்எல்ஏ சண்முகனும்,
குத்தாட்டம் போட்ட, ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டது. இதை
மொபைல்போனில் பலர் வீடியோ எடுக்க தற்போது பரவி வருகிறது.
எம்எல்ஏவின் குத்தாட்டத்தை ஒரு சிலர் ரசித்தாலும், பலர்
கண்டித்துள்ளனர்.
