தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ செயல்வீரர்கள் கூட்டத்தில் எம்.எல்.ஏ., ஆவேச பேச்சு

செயல்வீரர்கள் கூட்டத்தில் எம்.எல்.ஏ., ஆவேச பேச்சு

செயல்வீரர்கள் கூட்டத்தில் எம்.எல்.ஏ., ஆவேச பேச்சு


ADDED : நவ 26, 2024 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2024 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: ஈரோடு அ.தி.மு.க., புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில், செயல்-வீரர் ஆலோசனை கூட்டம், கவுந்தப்பாடியில் நேற்றிரவு நடந்தது. இதில் பவானி எம்.எல்.ஏ., கருப்பணன் பேசியதாவது:

நுாறாண்டு காலம் இந்த அ.தி.மு.க., கட்சி இருக்கும் என ஜெ., கூறியுள்ளார். இந்த கட்சிக்கு ஆழிவே கிடையாது. யாருக்கு திறமை இருக்கிறதோ, அவர் அ.தி.மு.க.,வில் முதல்வராக முடியும். தி.மு.க., ஆட்சியில், அரிசி ஒரு சிப்பம் 1,700 ரூபாய்க்கு விற்கிறது. அவர்கள் வழங்கும் மகளிர் உதவித்தொகை எதற்கும் உதவாது. அ.தி.மு.க., ஆட்சியில், 3,000 ரூபாய் செலவான இடத்தில் தற்போதைய ஆட்சியில், 6,000 ரூபாய் செலவாகிறது. இவ்வாறு பேசினார். முன்னதாக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார். கூட்டத்தில் மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us