ADDED : மார் 05, 2024 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்:காங்கேயம் அருகே அரசம்பாளையத்தில் ஆயில் மில்லில் லோடுமேனாக வேலை செய்யும் வட மாநில தொழிலாளி பிங்கு சக்னி, 30; அரசம்பாளையத்தில் மொபைல்போனை கையில் வைத்தபடி சாலையோரம் நின்றிருந்தார்.
அப்போது டூவீலரில் வந்த ஆசாமி, மொபைல்போனை பறித்து சென்றான். அங்கிருந்தவர்கள் உதவியுடன் பிங்கு சக்னி, ஆசாமியை துரத்தி பிடித்து, காங்கேயம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் திருவாரூர் மாவட்டம் கீலாம்மனுாரை சேர்ந்த யுவராஜ், 33, என தெரிந்தது. ஆசாமியை போலீசார் கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.

