ADDED : ஜூலை 12, 2026 05:51 AM

புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி அடுத்த காவிலிபாளையத்தில், வேளாண்மைத்துறை சார்பில் அட்மா திட்ட வயல் விழா, வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா தலைமையில் நடந்தது. பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் சத்தியசீலன், பயிர்களில் ஏற்படும் பூச்சிகளை இயற்கை முறையில் பூச்சி விரட்டி தயாரித்து கட்டுப்படுத்தும் வழிமுறை பற்றி கூறினார்.
கோபி வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி சரவணகுமார், மண்வளம் மேம்பாடு, இயற்கை விவசாயம் மற்றும் ரசாயான உரங்களை குறைத்து பயிருக்கு தேவையான உரமிடுதல், மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார். வேளாண் இயந்திரங்கள், வேளாண் கருவிகள் மற்றும் இடுபொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்புராஜ் மற்றும் மீரா செய்திருந்தனர்.
