ADDED : ஜன 21, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் வகையிலும், மின்னணு ஓட்டுப்பதிவை முறையாக செயல்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த மாதிரி ஓட்டுப்பதிவு பயிற்சி நடந்தது. ரங்கம்
பாளையம் ஆர்.ஏ.என்.எம்., கல்லுாரி, ரயில்வே ஸ்டேஷன் பகுதி உட்பட பல்வேறு பகுதிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்-டுப்பதிவு செய்வதை, மாதிரி ஓட்டுப்பதிவாக பொதுமக்களுக்கு பயிற்சி வழங்கினர். மாநகராட்சி
பணியாளர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மூலம், சென்ட்ரல் தியேட்டர் ஜவுளி மார்க்கெட், தங்கபெருமாள் வீதி காய்கறி சந்தை, கனி மார்க்கெட் வணிக வளாக பகுதிகளில், 100 சதவீத ஓட்டுப்ப-திவை வலியுறுத்தி, விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.