ADDED : ஜூன் 19, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக, பகலில் வெயில் வாட்டி எடுத்தது. நேற்று காலையிலிருந்து மாலை 4:00 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் திடீரென அந்தியூர், தவிட்டுப்பாளையம், பிரம்மதேசம், கூலி வலசு, முனியப்பன்பாளையம், அத்தாணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 20 நிமிடங்களுக்கு மேலாக மிதமான மழை பெய்தது.