/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகரில் மித மழை; பெருந்துறையில் கொட்டியது
/
மாநகரில் மித மழை; பெருந்துறையில் கொட்டியது
ADDED : மே 18, 2024 01:35 AM
ஈரோடு: ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், ஈரோடு மாநகரில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் தாக்கம் அதிகரித்தது. அதாவது, ௧௦௧.௪ டிகிரி வெயில் பதிவானது. இதனால் மக்கள் புழுக்கத்தில் தவித்தனர். மதியம், 3:௦௦ மணியளவில் துாறல் போடத் தொடங்கியது. பழையபாளையம், நசியனுார் ரோடு, வெட்டுக்காட்டு வலசு, கணபதி நகர், வீரப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமாக பெய்த மழை, 15 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. ஆனாலும் சாரல் மழையாக மாறி துாறியது. பலத்த மழை இல்லாவிட்டாலும் வானம் இருண்டும், அவ்வப்போதும் இடியும் இடித்தபடி இருந்தது. இதனால் மாலையில் வெப்பத்தின் தாக்கம் வெகுவாக குறைந்தது.
* பவானியில் நேற்று மதியம், 2:௦௦ மணிக்கு மிதமான மழை பெய்யத் தொடங்கியது. ஊராட்சிக்கோட்டை, குருப்பநாய்யக்கன்பாளையம், பவானி நகரம் உள்ளிட்ட பல இடங்களில், 20 நிமிடத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால், குளிர் காற்று வீசியது.
* நம்பியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான திமப்பயன்பாளையம், வரப்பாளையம், மலையப்பாளையம், ராயர்பாளையம், எலத்துார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம், ௩:௦௦ மணி முதல், 4:௦௦ மணி வரை கனமழை பெய்தது.
* பெருந்துறை மற்றும் சுற்றுப் பகுதிகளில், வெயில் வாட்டிய நிலையில், நேற்று மாலை, 4:௦௦ மணியளவில் பலத்த இடி மின்னலுடன் மழை கொட்ட தொடங்கியது. மாலை, 6:30 மணி வரை மழை பெய்தது. பிறகு லேசான மழை பெய்தது. மழையால் இரவில் வெப்பத்தின் தாக்கம் தணிந்தது.

