/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எஸ்.கே.எம்., பூர்ணாவில் நவீன இயந்திரம்
/
எஸ்.கே.எம்., பூர்ணாவில் நவீன இயந்திரம்
ADDED : செப் 25, 2024 01:46 AM
எஸ்.கே.எம்., பூர்ணாவில் நவீன இயந்திரம்
ஈரோடு, செப். 25-
ஈரோட்டினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்.கே.எம்., அனிமல் பீட்ஸ் அண்ட் புட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கால்நடை மற்றும் கோழித்தீவனங்களை தயாரித்து விற்பனை செய்கிறது.
தற்போது எஸ்.கே.எம்., பூர்ணா பெயரில், 18 ஆண்டுகளாக பல வகை சமையல் எண்ணெய்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதில் பூர்ணா ரைஸ் பிரான் ஆயில் தரத்தை மேம்படுத்தும் வகையில், நவீன இரட்டை சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது. இதன் தொடக்க விழாவில் நிறுவன நிர்வாக இயக்குனர் சந்திரசேகர் தலைமை வகித்து, இயந்திரத்தை துவக்கி வைத்தார். இயக்குனர் சியாமளா ஷர்மிலி, செயல் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணா முன்னிலை வகித்தனர்.
இந்த நவீன சுத்திகரிப்பு இயந்திரம் மூலம், ரைஸ் பிரான் ஆயிலின் நிறம் மேம்படுவதுடன், அதிலுள்ள நுண் ஊட்டச் சத்துக்கள் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தனர். நிகழ்ச்சியில் நிறுவன பொது மேலாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.