/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மோடி 10 ஆண்டு சாதனை: மகளிரணி நடைபயணம்
/
மோடி 10 ஆண்டு சாதனை: மகளிரணி நடைபயணம்
ADDED : மார் 05, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;பிரதமர் மோடி சாதனையை பாராட்டியும், விளக்கியும் பா.ஜ. மகளிரணியினர் நேற்று ஈரோட்டில் நடைபயணம் மேற்கொண்டனர்.
பாரத பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால சாதனையை விளக்கியும், பாராட்டியும் வேண்டும் மோடி மீண்டும் மோடி என்ற கோஷத்துடன், ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ. மகளிரணி தலைவி புனிதம் ஐயப்பன் தலைமையில், 25 பெண்கள், ஈரோடு சம்பத் நகர் கொங்கு கலையரங்கத்தில் இருந்து சம்பத் நகர் பிரிவு சாலை வரை நடைபயணமாக சென்றனர்.

