/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கைலாசநாதர் கோவிலில் சோமவார நிறைவு பூஜை
/
கைலாசநாதர் கோவிலில் சோமவார நிறைவு பூஜை
ADDED : டிச 10, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கைலாசநாதர் கோவிலில்
சோமவார நிறைவு பூஜை
சென்னிமலை, டிச. 10-
கார்த்திகை மாதத்தின் கடைசி மற்றும் நான்காவது சோமவார பூஜை, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் நேற்று நடந்தது. கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள்கிழமை, சிவனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.
இதன்படி கடந்த நவ., 18, 25, டிச.,2 மற்றும் நேற்று கார்த்திகை மாத திங்கள்கிழமையை ஒட்டி, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், 108 சங்கு பூஜை, கலச வேள்வி, யாகசாலை பூஜை நடந்தது. கைலாசநாதருக்கு சங்காபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் உள்பட நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

