ADDED : ஆக 06, 2026 06:15 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோட்டில், அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 25 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர்.
ஈரோடு, திண்டல்மேடு வித்யா நகரில் அரிசி கடை வைத்திருப்பவர் ரங்கசாமி,
50. இக்கடைக்கு அடுத்துள்ளது சக்தி பேக்கரி. இதன் உரிமையாளர்
சக்திவேல், 43. இருவரும் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு கடையை
பூட்டி விட்டு சென்றனர்.
நேற்று காலை 6:00 மணிக்கு திறக்க
வந்தபோது, இரு கடைகளின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு
இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அரிசி கடை உரிமையாளர்
கடைக்குள் வைத்திருந்த, 20 ஆயிரம் ரூபாய், பேக்கரியில் இருந்து, 5,000
ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. ஈரோடு தாலுகா
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 'சிசிடிவி' கேமரா பதிவுகளை
ஆராய்கின்றனர்.
