ADDED : ஆக 06, 2026 06:16 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர்
அருகே தணணீர்பந்தல் பகுதியில், கிராவல் மண் கடத்துவதாக ஆர்.ஐ.,
செந்தில்ராஜாவுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி நேற்று முன்தினம்
இரவு, அப்பகுதியில் வருவாய்த்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, குருநாத சுவாமி கோவில் வனத்துக்கு செல்லும்
வழியிலிருந்து, 1.5 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்த டிராக்டரை
நிறுத்தினர்.வருவாய் அலுவலரை கண்டவுடன், டிராக்டரை நிறுத்தி
விட்டு டிரைவர் ஜெயராமன் தப்பினார். இதையடுத்து, டிராக்டரை பறிமுதல்
செய்து அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். ஆர்.ஐ.,
செந்தில்ராஜா கொடுத்த புகாரின்படி, அந்தியூர் போலீசார் வழக்கு
பதிந்து ஜெயராமனை தேடி வருகின்றனர்.
