/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எம்.பி.,க்கள் முன்னிலையில் கண்காணிப்பு குழு கூட்டம்
/
எம்.பி.,க்கள் முன்னிலையில் கண்காணிப்பு குழு கூட்டம்
எம்.பி.,க்கள் முன்னிலையில் கண்காணிப்பு குழு கூட்டம்
எம்.பி.,க்கள் முன்னிலையில் கண்காணிப்பு குழு கூட்டம்
ADDED : ஜன 13, 2024 04:12 AM
ஈரோடு: மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி தலைமையில் ஈரோட்டில் நேற்று நடந்தது.
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, திருப்பூர் எம்.பி., சுப்பராயன், எம்.பி., அந்தியூர் செல்வராஜ், மேயர் நாகரத்தினம், எம்.எல்.ஏ., வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர்.மத்திய அரசின் நிதியுதவி, திட்டங்களில் நடக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மத்திய அரசின், 34 திட்டங்கள் சார்ந்த பணிகள் ஆய்வு செய்தனர்.குறிப்பாக ஜல்ஜீவன் மிஷன், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டப்பணி ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் எஸ்.பி., ஜவகர், டி.ஆர்.ஓ., சாந்தகுமார், பயிற்சி உதவி கலெக்டர் வினய்குமார், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.