/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதந்தோறும் தேர்வு: சி.இ.ஓ.,
/
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதந்தோறும் தேர்வு: சி.இ.ஓ.,
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதந்தோறும் தேர்வு: சி.இ.ஓ.,
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதந்தோறும் தேர்வு: சி.இ.ஓ.,
ADDED : ஜூலை 24, 2025 02:05 AM
ஈரோடு, :ஈரோடு மாவட்டத்தில், 2025ம் ஆண்டு மார்ச்-ஏப்ரலில் 10ம் வகுப்பு பொது தேர்வில், 96 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில், 11வது இடம் பிடித்தது. கடந்தாண்டு, 95.08 சதவீதம் தேர்ச்சி பெற்று 7வது இடமும், 2023ல், 94.53 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 7வது இடமும் பிடித்தது.
தேர்ச்சியில் அதிக சதவீதம் பெற்றும் கூட, 11வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. கணித பாடத்தில் அதிக மாணவ, மாணவிய்ர குறைந்த மதிப்பெண் பெற்றதே முக்கிய காரணம். அதுமட்டுமின்றி தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில், மொழி பாடத்தில் தமிழில் தோல்வி அடைந்தனர். இதுவே தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கு காரணமாக அமைந்தது. இதை படிப்பினையாக கொண்டு இக்கல்வியாண்டில் மாணவ, மாணவியர் அதிக சதவீத தேர்ச்சி பெற செய்யும் வகையில் பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுபற்றி முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் கூறியதாவது: இந்தாண்டு முதல் 10, பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு ஒவ்வொரு மாதமும் பள்ளி அளவில் தேர்வு நடத்தப்படும். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கற்றுணர இயலும். ஜூன் இறுதியில் தேர்வு நடந்தது. மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண் வழங்கப்பட்டது. மதிப்பெண் குறைவான காரணம், மதிப்பெண் அதிகரிக்கும் வழி முறை குறித்து கற்று கொடுக்கப்படுகிறது. இந்தாண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கூறினார்.