/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி பகுதியில் கொசு மருந்து அடிப்பு
/
மாநகராட்சி பகுதியில் கொசு மருந்து அடிப்பு
ADDED : செப் 21, 2025 01:02 AM
ஈரோடு :ஈரோடு மாநகரில் பகலில் கடும் வெயில் வாட்டினாலும், மதியத்துக்கு மேல் மழை, இரவில் மேகமூட்டமாக காணப்படுகிறது.
இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி கொசு அதிகமாக உற்பத்தியாகி உள்ளது. மரங்கள், செடிகளில் இருக்கும் கொசுக்கள் இரவில் மட்டுமின்றி பகலிலும் கடிக்கிறது. இதனால் மாநகராட்சி வார்டுகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
மாநகராட்சி கொசு ஒழிப்பு பணி பணியாளர்கள் கூறியதாவது: வீடு, தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீர், மாசுபட்ட கழிவு நீர், தொட்டி போன்றவைகளில் சேகரமாகும் தண்ணீரை உடனுக்குடன் அகற்றி, பிளீச்சிங் பவுடர் துாவ வேண்டும். கொசு மருந்து அடிக்க வருவோரிடம், வீட்டின் சுற்றுப்பகுதியிலும் அடித்து செல்ல வலியுறுத்தலாம். இவ்வாறு கூறினர்.