/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொசு தொல்லையால் அவதி கோரிக்கையால் மருந்தடிப்பு
/
கொசு தொல்லையால் அவதி கோரிக்கையால் மருந்தடிப்பு
ADDED : நவ 23, 2024 01:35 AM
கொசு தொல்லையால் அவதி
கோரிக்கையால் மருந்தடிப்பு
ஈரோடு, நவ. 23-
ஈரோடு மாநகராட்சி, 10வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், பிச்சைக்காரன் பள்ளம் ஓடை உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட நீர் வழித்தடங்கள் உள்ளன. இவற்றிலும், சாக்கடை, மழைநீர் வடிகால்களிலும் கழிவுநீர் ஓடுவதால் கொசு உற்பத்தி ஆதாரங்களாக மாறியுள்ளன. குறிப்பாக கடித்து தொல்லை கொடுக்கும் கியூலெக்ஸ் கொசு அதிகம் உள்ளது. தற்போது அவ்வப்போது மழை பெய்வதால் அதிகம் இனப்பெருக்கமாகி விட்டன. கொசு வலைகளை பொருத்தியும் பலனில்லை. கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில், 10வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், கொசு மருந்து அடிக்கும் பணியில், 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.
மேலும் சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில், துார்வாரும் பணியும் நடந்தது.