sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகனை காப்பாற்றிய தாய் மின்சாரம் தாக்கி பலி

/

மகனை காப்பாற்றிய தாய் மின்சாரம் தாக்கி பலி

மகனை காப்பாற்றிய தாய் மின்சாரம் தாக்கி பலி

மகனை காப்பாற்றிய தாய் மின்சாரம் தாக்கி பலி


ADDED : ஜூன் 23, 2025 05:13 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அறச்சலுார், அ.அனுமன்பள்ளி, மாப்பிள்ளை பெரியபாளை-யத்தை சேர்ந்த முனுசாமி மனைவி பாப்பாத்தி, 67; இவர்களின் மகன் துரைராஜ், 37; தனியார் மருத்துவமனை ஊழியர்.

கணவர் இறந்து விட்ட நிலையில், மாப்பிள்ளை பெரிய பாளை-யத்தில் உள்ள மகள் வீட்டில் பாப்பாத்தி வசித்தார். தாயை பார்க்க மனைவி கோகிலாவுடன், துரைராஜ் சென்றார். கடந்த, 21ல் துணிகளை துரைராஜ் கம்பியில் காய போட்டபோது மின்-சாரம் தாக்கி விழுந்தார்.

மகனை காப்பாற்ற தொட்டு துாக்கிய பாப்பாத்தியை மின்சாரம் தாக்கியது. இதைப்பார்த்த துரைராஜின் மனைவி கோகிலா மெயின் சுவிட்சை ஆப் செய்தார். சிறிது நேரத்தில் துரைராஜ் சுதா-ரித்து எழுந்தார்.

ஆனால், பாப்பாத்தி மயங்கிய நிலையில் கிடந்தார். ஈரோடு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், மருத்துவ பரி-சோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகு-றித்து அறச்சலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us