/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மருமகள், பேத்தி மாயம் போலீசில் மாமியார் புகார்
/
மருமகள், பேத்தி மாயம் போலீசில் மாமியார் புகார்
ADDED : அக் 09, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, அம்மாபேட்டை அருகே அட்டவணை புதுாரை சேர்ந்தவர் பாப்பா, 65. இவரது மகன் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் இறந்தார். மருமகள் கீதா, 25, பேத்திகள் தனுஷா ஸ்ரீ, 4, தஷ்மிதா, 3, ஆகிய மூன்று பேரும், மாமியாருடன் உள்ளனர்.
நேற்று முன்தினம் வழக்கம் போல், மூன்று பேரும் வீட்டில் இருந்துள்ளனர். காலையில் பாப்பா கூலி வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டுக்கு வந்தபோது, மருமகள், பேத்திகளை காணவில்லை. உறவினர்கள் வீடுகளுக்கும் அவர்கள் செல்லவில்லை. இதையடுத்து தனது மருமகள், இரண்டு பேத்திகளை கண்டுபிடித்து தருமாறு, அம்மாபேட்டை போலீசில் பாப்பா புகார் செய்துள்ளார்.