/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாய் மர்மச்சாவு; மகன் புகாரால் டிரைவர் கைது
/
தாய் மர்மச்சாவு; மகன் புகாரால் டிரைவர் கைது
ADDED : பிப் 04, 2024 10:13 AM
ஈரோடு: ஈரோடு, வீரப்பன் சத்திரம், அசோகபுரம், கலைமகள் இரண்டாவது வீதியை சேர்ந்தவர் சித்ரா, 37; ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் ஜவுளிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவரது கணவர் ஏழு ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். இவர்களின் மகன் கவின், 20;
சித்ரா வியாபாரம் சம்பந்தமாக திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சென்றபோது, காங்கேயத்தை சேர்ந்த இசக்கியப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி சித்ரா வீட்டில் வந்து தங்கியுள்ளார். கடந்த, 1ல் அவரது மனைவியுடன் சண்டை போட்டு வந்து, சித்ரா வீட்டில் தங்கி, தொடர்ந்து மது குடித்துள்ளார். இதை கண்டித்த சித்ராவை தாக்கியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சித்ரா, வீட்டு விட்டத்தில் சேலையால் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த இசக்கியப்பன், சித்ராவின் தோழி சங்கீதா ஆகியோர் அவரை மீட்டு, சமாதானம் செய்து வீட்டில் படுக்க வைத்துள்ளனர். இந்நிலையில், 2ம் தேதி அதிகாலை கவின் வீட்டுக்கு வந்தபோது, உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன், சித்ரா பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த அவர், ஈரோடு அரசு மருத்துவ
மனைக்கு, தாயை கொண்டு சென்றுள்ளார். டாக்டர் பரிசோதனையில், சித்ரா ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. வீரப்பன்சத்திரம் போலீசில், கவின் புகாரளித்தார்.
இதன்படி திருப்பூர் மாவட்டம் காங்கேயம், அகஸ்திலிங்கபாளையத்தை சேர்ந்த இசக்கியப்பனை, 35. போலீசார் கைது செய்தனர். ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வருகிறார். தற்கொலை வழக்கை சந்தேக மரணம் என வழக்குப்பதியப்பட்டுள்ளனர்.