ADDED : ஆக 29, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் ராணி, 67; இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் சீனிவாசனுடன் இருந்து கொண்டு மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கியவரை, நேற்று காலை காணவில்லை. ராணியின் இளைய மகன் சக்திவேல் புகாரின்படி சத்தி போலீசார் தேடி வருகின்றனர்

