ADDED : ஆக 13, 2025 05:17 AM
ஈரோடு: 'தாயுமானவர் திட்டத்தை' முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று துவக்கி வைத்தார். இதன் காணொலி காட்சி, ஈரோடு காரப்பாறை, புதுக்காலனி ரேஷன் கடைக்கு உட்பட்ட பகுதியில் ஒளிபரப்பானது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, வயது முதிர்ந்த ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளில் ரேஷன் பொருட்களை வழங்கி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:
இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 1,263 ரேஷன் கடைகளில், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கொண்ட, 81,792 ரேஷன் கார்டில், 99,218 பயனாளிகள், 70 வயதுக்கு மேற்-பட்டோர். 2,735 மாற்றுத்திறனாளிகள் என, 1 லட்சத்து, 1,953 பேருக்கு அவரவர் வீடுகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்-படும். ஒவ்வொரு மாதமும், 2வது சனி, ஞாயிறில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு பேசினார். நிகழ்வில் கலெக்டர் கந்தசாமி, எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், மண்-டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.