ADDED : ஜன 20, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில், தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைவர் அண்ணா சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மத்திய அரசு இயற்றியுள்ள புதிய போக்குவரத்து சட்டத்தில், ஓட்டுனர்களுக்கு பாதகமான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளனர். அவற்றை ரத்து செய்ய வேண்டும். குறிப்பாக 'ஹிட் அன்ட் ரன்' என்ற விதிப்படி, விபத்து ஏற்படுத்தி விட்டு ஓட்டுனர் தலைமறைவாகிவிட்டால், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, 7 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கும் சட்ட வழிமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசு இயற்றியுள்ள மேக்ஸ் கேப் வாகனத்துக்கான ஆயுள் வரியை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் வழக்குப்பதிவு முறையை கைவிட வேண்டும், என வலியுறுத்தினர்.