பாதியில் நிறுத்தப்பட்ட தரைப்பால பணி கரூர் சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
பாதியில் நிறுத்தப்பட்ட தரைப்பால பணி கரூர் சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 16, 2026 06:41 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு பரிசல்துறை நால்ரோட்டை அடுத்த கரூர் பைபாஸ் ரோட்டில், தரைப்பாலம் கட்டும் பணி நடந்தது. ஆனால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: கரூர் சாலையில் நடக்கும் சாலை விரிவாக்கப்பணியின் ஒரு பகுதியாக, தரைப்பாலம் கட்ட திட்டமிட்டனர். இதற்காக சாலையின் ஒருபுறம் போக்குவரத்தை தடை செய்து, பாலம் கட்டும் பணியை தொடங்கினர். ஆறு மாதமாகியும் எந்த பணியும் நடக்காமல், பாதி தரைப்பாலம், பாதி தார்ச்சாலை என்ற நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மேலும் மெத்தனம் காட்டாமல், பணியை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
