/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'மாவட்ட அளவிலேயே குறைகளுக்கு தீர்வு காணுங்கள்' கண்காணிப்பு குழு கூட்டத்தில் எம்.பி., வலியுறுத்தல்
/
'மாவட்ட அளவிலேயே குறைகளுக்கு தீர்வு காணுங்கள்' கண்காணிப்பு குழு கூட்டத்தில் எம்.பி., வலியுறுத்தல்
'மாவட்ட அளவிலேயே குறைகளுக்கு தீர்வு காணுங்கள்' கண்காணிப்பு குழு கூட்டத்தில் எம்.பி., வலியுறுத்தல்
'மாவட்ட அளவிலேயே குறைகளுக்கு தீர்வு காணுங்கள்' கண்காணிப்பு குழு கூட்டத்தில் எம்.பி., வலியுறுத்தல்
ADDED : டிச 28, 2024 02:49 AM
ஈரோடு: ''மாவட்ட அளவிலேயே, குறைகளுக்கு தீர்வு காணுங்கள்,'' என, கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஈரோடு எம்.பி., பிரகாஷ் பேசினார்.
ஈரோட்டில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்கா-ணிப்பு குழுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, திருப்பூர் எம்.பி., கே.சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்-தனர். கூட்டத்தில், ஈரோடு எம்.பி., பிரகாஷ் பேசியதாவது:
திருப்பூரில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி, 'மாவட்ட அளவில் மக்களின் கோரிக்கைகள், குறைகளுக்கு விரைவாக தீர்வு காணுங்கள். அவ்வாறு இல்லாத சூழலிலேயே, முதல்வருக்கு கோரிக்கை மனுக்கள் செல்கிறது. இனி வரும் காலங்களில் ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை மேற்-கொண்டு, முதல்வருக்கு புகார்கள், மனுக்கள் செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கேட்டு கொண்டார். அதுபோன்று அனைத்து துறையினரும் செயல்பட்டு, மாவட்ட அளவிலேயே குறைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும்போது, அவை மக்கள் பிரதிநிதிகளால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, முறையான நிதிகள் சென்று சேர்வதையும், பணிகளை விரைவுப-டுத்துவதும், இக்குழு கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மாநக-ராட்சி, நகராட்சிகளில் குப்பையை சேகரித்து உரமாக்குதல், கிரா-மங்களில், 100 நாள் வேலை திட்டப்பணிகளுக்கு பதிவு செய்-தோருக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்தல், அத்திட்டம் மூலம் தேவையான பணிகளை மேற்கொள்ளுதலை கண்காணிக்க வேண்டும்.
அனைத்து துறைகளிலும் நடந்து வரும் பணிகளை, துறையின் உயர் அலுவலர்கள் விரிவாக ஆய்வு செய்து, விரைவுபடுத்-துங்கள். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படும்போதுதான், திட்ட பயன்கள் மக்களை விரைவாக சென்றடையும்.
இவ்வாறு பேசினார்.
அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சதீஸ், மாநகராட்சி ஆணையர் மணீஷ், டி.ஆர்.ஓ., சாந்-தகுமார், மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு உட்பட பலர் பங்கேற்றனர்.

