/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கச்சேரி அஞ்சலகத்தை மூடாதீர் கலெக்டருக்கு எம்.பி., கடிதம்
/
கச்சேரி அஞ்சலகத்தை மூடாதீர் கலெக்டருக்கு எம்.பி., கடிதம்
கச்சேரி அஞ்சலகத்தை மூடாதீர் கலெக்டருக்கு எம்.பி., கடிதம்
கச்சேரி அஞ்சலகத்தை மூடாதீர் கலெக்டருக்கு எம்.பி., கடிதம்
ADDED : ஜூலை 18, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி நகர மக்களின் கோரிக்கையை ஏற்று, திருப்பூர் எம்.பி., சுப்பராயன், ஈரோடு கலெக்டரிடம் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பவானி நகரில் கச்சேரி அஞ்சல் நிலையம் பல ஆண்டுகளாக செயல்படுகிறது. இதை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அஞ்சலகத்தை மூடாமல் பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டடத்துக்கு மாற்ற வேண்டும். இது தொடர்பாக கோவை மண்டல அஞ்சல் துறை செயலாளருக்கு, மூன்று முறை கடிதம் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இதற்கு ஈரோடு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.