/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முகாசி பிடாரியூர் கிராம சபை கூட்டத்தில் காத்திருப்பு போராட்டம்
/
முகாசி பிடாரியூர் கிராம சபை கூட்டத்தில் காத்திருப்பு போராட்டம்
முகாசி பிடாரியூர் கிராம சபை கூட்டத்தில் காத்திருப்பு போராட்டம்
முகாசி பிடாரியூர் கிராம சபை கூட்டத்தில் காத்திருப்பு போராட்டம்
ADDED : அக் 03, 2024 06:55 AM
சென்னிமலை: சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில், பொதுமக்கள் சிலர், சென்னியங்கிரி வலசு நடுநிலைப்பள்ளி, முகாசிபிடாரியூர் துவக்கப்பள்-ளியிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்-டத்தில், சமையல் செய்பவர்களுக்கு மாத சம்-பளம் மற்றும் காய்கறி செலவினங்களை முறை-யாக வழங்காமல் இழுத்தடிப்பு செய்வது. காஸ் சிலிண்டர் உரிய நேரத்தில் வழங்குவதில்லை.
இதனால், காலை உணவு சமையல் வேலை செய்யும் எளிய குடும்பத்தை சார்ந்த மகளிர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்று கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. காலை உணவு திட்ட வங்கி கணக்கின், பரிவர்த்தனை அறிக்கையை ஆய்வு செய்து நட-வடிக்கை எடுக்க கோரிக்கை வைத்து, மகளிர் திட்ட அலுவலர் வருகைக்காக கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் சிலர் காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பால-முருகன், கிராம சபைக்கு வருகை தந்து பேச்சு வார்த்தை நடத்தி, விசாரணை செய்து நடவ-டிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைய-டுத்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

