ADDED : நவ 14, 2026 06:35 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாநகராட்சி எட்டாவது வார்டு எல்.வி.ஆர்.காலனி மக்கள், மாநகராட்சி
ஆணையரிடம் நேற்று மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
எல்.வி.ஆர்.காலனியில்,
200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மாநகராட்சி சார்பில்
முறையான குடிநீர் இணைப்பு வழங்காததால் போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி
வருகிறோம். சில வீடுகளில் நிலத்தடி நீர் இல்லாததால் பணம் கொடுத்து
தண்ணீர் வாங்குகின்றனர். சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளின் முன்பு
கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இது தொடர்பாக பலமுறை புகார்
தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு கூறினர்.
