ADDED : நவ 14, 2026 06:35 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:மொடக்குறிச்சி
தாலுகாவில் வரும், 18ம் தேதி காலை, 9:00 மணி முதல் மறுதினம், 19ம் தேதி
காலை, 9:00 மணி வரை, 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்ட முகாம் கலெக்டர்
கந்தசாமி தலைமையில் நடக்க உள்ளது.
பல்வேறு துறை மூலம்
செயல்படுத்தப்படும் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள
ஆய்வு செய்ய உள்ளனர். பல்வேறு மாவட்ட நிலை அலுவலர்கள், இந்த ஆய்வு
பணியில் ஈடுபடுகின்றனர். 18ம் தேதி மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை
மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி,
குறை கேட்டறிந்து கோரிக்கை மனு பெறுதலும் நடக்கிறது. அரசின் சேவைகளை
எளிதில் பெற இம்முகாமை மக்கள் பயன்
படுத்தி கொள்ளலாம்.
